Saturday 11 April 2015

ஒரு மரணம் சில கேள்விகள் – 10


 “இந்த அரசியல்களத்தில் அவர் முற்றிலுமாக ஓரங்கட்டப்படலாம்!” என்றான் அப்து முனாஃபிக்.

“இப்ன் ஷியா, இன்று அல்லாஹ்வின் தூதரின் முன்பு, உமரும் அவரது ஆட்களும் செய்ததை உன்னால் ஏற்க முடிகிறதா?” என்றான் இப்ன் சுன்னா

“வழக்கமாக இறைத்தூதரின் முன்பு உமர் அவ்வாறு பேசக்கூடியவர் அல்ல…!” என்றான் இப்ன் ஷியா.

“சரி…! ஆனால் இன்று உமர் நடந்து கொண்டவிதத்தை நீயும்தானே பார்த்தாய்?” என்றான் சுன்னா.

”… …!”  இப்ன் ஷியா அமைதியாக இருந்தான்.

“முன்பு ஒரு முறை உமரும், அபூபக்கரும் பனூ தமீம் குலத்தினருக்கு தலைவரை நியமனம் செய்வதில் கருத்துவேறுபாடு கொண்டு இறைத்தூதரின் முன்பாக சச்சரவு செய்த பொழுது நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் இதனால் அழிந்து விடும். அல்லாஹ்வின் தூதரிடம் தமது குரல்களைத் தாழ்த்திக் கொள்வோரின் உள்ளங்களை இறை அச்சத்துக்காக அல்லாஹ் பரிசுத்தப்படுத்தி விட்டான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் இருக்கிறது (Q 49:1,2, புகாரி 4367), என்ற குர்ஆன் வசனங்கள் வெளியானது.  அன்றிலிருந்து தூதரின் முன்பாக குரலை உயர்த்திப் பேசாமல், அமைதியாகப் பேசுவதாகக் காண்பித்து எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று ஒரு பெரும் குழப்பத்தைத் தீர்த்து நேர்வழி காண்பிக்க முனைந்த அல்லாஹ்வின் தூதரது கருத்தை மறுத்து, சச்சரவு செய்து அவரைப் பேசவிடாமல் செய்து தூதரின் விருப்பத்தை முடக்கிவிட்டார். இதுதான் உமர், அல்லாஹ்வின் கட்டளையை மதிக்கும் இலட்சணம் போலிருக்கிறது!” என்றான் முனாஃபிக்.

“... ...?!”

“இப்ன் ஷியா...! அல்லாஹ்வின் மீது ஆணையாக உன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உண்மையைச் சொல்!” என்றான் சுன்னா.

”ஒருவேளை அல்லாஹ்வின் தூதரின் உடல் நிலை மீது கொண்ட அக்கறையால் உமர் அப்படிச் செய்திருப்பாரோ?” என்றான் இப்ன் ஷியா.

”அல்லாஹ்வின் தூதர் தொழ வைப்பதற்காக வரும் பொழுதோ அல்லது வேறு ஏதாவது அறிவுரைகூறும் பொழுதோ இல்லாத கரிசணமும் கருணையும் மரணசானம் கூறும்பொழுது மட்டும் பொங்கியெழுவதில் உள்நோக்கம் இல்லாமல் இருக்க முடியாது!” என்றான் முனாஃபிக்.

உமரின் நாவில் அல்லாஹ் சத்தியத்தைப் போட்டிருக்கிறான்; அதைக் கொண்டு அவர் பேசுகிறார் என்று இறைத்தூதர் கூறியிருக்கிறார்”  (அபூதாவூத் 2573) என்று மறுத்தான் இப்ன் ஷியா.

“சரி..! இன்று தனது சமுதாயம் வழிதவறிவிடாமல் இருப்பதற்காக ஒரு மடலை எழுதித் தருகிறேன் என்று கூறிய இறைத்தூதரின் நாவில் வந்தது அசத்தியமா?”

“... ...!?”

“இறைத்தூதரின் கோரிக்கையை மறுத்து சச்சரவு செய்த உமரின் நாவில் சத்தியம் இருந்தது என்கிறாயா?”

 “… …!?”

“அல்லாஹ்வின் தூதர் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று கட்டளையிடுவதற்கு உமர் யார்? மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள் (Q33:36) என்கிறது குர்ஆன் வசனம்! உமர் செய்தது சரியா?”

”உமரின் செய்கையை என்னால் ஏற்க முடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் உமர் நடந்து கொண்டவிதம் தவறுதான்! அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடாது!” என்றான் தயக்கமாக.

“குர்ஆனின் அடிப்படையில் நோக்கினால் உமர் வழிகெட்டவர்தானே...?” என்றான் இப்ன் சுன்னா?

“அடுத்த தலைவர் யாரென்பதை முடிவு செய்வதில் குழப்பம் நிலவுவது எல்லோருமே நன்கு அறிந்த விஷயம்; குழப்பம் விலகி, அனைவரும் நேர்வழி பெற ஒரு கடிதம் எழுதித் தருகிறேனென்று அவரே சொல்லும் பொழுது, அதை இருகரம் நீட்டி வரவேற்பதுதான் அறிவுடைமை. உங்கள் கடிதம் தேவையில்லை குர்ஆன் இருக்கிறது நமக்கு அதுவே போதும் என்று சொல்வது அதிகப் பிரசங்கித்தனம். இந்த விஷயத்தில் குர்ஆன் வழிகாட்டும் என்றிருந்தால், கடிதம் எழுதித் தருகிறேன் என்று கூறிய அல்லாஹ்வின் தூதர் முட்டாளா...? இல்லை உமர் புத்திசாலியா?” என்றான் முனாஃபிக்

“இந்த விஷயத்தில் உமர் புத்திசாலிதான் அதனால்தான் மரணசாசனம் எழுதுவதை தடுத்துவிட்டார்!” என்றான் இப்ன் சுன்னா வெறுப்புடன்.

“உமர் தலைமையில் வந்தவர்கள் தவறாக நடந்து கொண்டிருந்தாலும், ஒருவேளை இறைத்தூதரின் நெருங்கிய நண்பர் அபூபக்ர் வந்து வருத்தம் தெரிவிக்கலாம் அல்லது மரணசாசனம் எழுதி வாங்கலாம்... அதற்கு வாய்ப்பிருக்கிறதே...?” என்றான் இப்ன் ஷியா

”நிச்சயமாக இருக்காது! இப்படியொன்று நிகழ்ந்ததை அறிந்ததாகக் கூட காண்பித்துக் கொள்ளமாட்டார். இது இருவரின் திட்டமிட்ட சதியாகத்தான் தோன்றுகிறது!” என்றான் முனாஃபிக்.

”இனியும் நாம் இங்கே தங்கியிருக்க வேண்டுமா என்ன?” என்றான் இப்ன் ஷியா.

“என்னென்ன காட்சிகள் அரங்கேறுகிறது என்பதை அருகிலிருந்தே பார்ப்போம்” என்றான் முனாஃபிக்.

லுஹர் தொழுகைக்கான அழைப்பு ஒலிக்கத் துவங்கியது. இப்ன் சுன்னாவும் இப்ன் ஷியாவும் சோம்பலாக எழுந்து பள்ளிவாசலுக்குச் செல்லத் தயரானார்கள்.

“நான் தொழவரவில்லை நீங்கள் போய் வாருங்கள்” என்றான் முனாஃபிக்.

“ஏன் என்ன ஆயிற்று?” இது இப்ன் சுன்னா

“விருப்பமில்லை!”

“முனாஃபிக் கவனமாக இரு! நீ வேறு பாதையில் செல்வதாகத் தோன்றுகிறது!”

”… …!”

“பேரிச்சங்கனிகளைத் முழுவதுமாக தின்று தீர்க்காமல் எங்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வை! வரும்பொழுது ஏதாவது வாங்கி வருகிறோம்” என்றவாறு கூடாரத்தின் திரையை இழுத்து மூடி, இருவரும் வெளியேறினார்கள்.

சிந்தனையில் ஆழ்ந்திருந்த அப்து முனாஃபிக் அப்படியே உறங்கிப்போனான்.
+++++++

அன்றைய மஃரிப்பிற்குப் பிறகு அபூபக்கரின் இல்லத்தில்,




அபூபக்கர் சிந்தனையுடன் சாயம்பூசப்படாத தனது தாடியைப் பிராண்டிக் கொண்டிருந்தார். முகத்தில் சுருக்கம் முன்பைவிட சற்று அதிகமாகவே இருந்தது.  குதிரையின் குழம்பொலிகள் கேட்க நிமிர்ந்து உட்கார்ந்தார்.

உமர் வேகமாக உள்ளே நுழைந்தார். அவரது கண்கள் நாலாபுறமும் சுழன்று வீட்டை சோதனை செய்தது.

“வீட்டில் என்னைத்தவிர வேறு யாருமில்லை” என்றார் அபூபக்ர்

“அல்லாஹ்வின் தூதர் கடிதம் எழுதி விடுவாரோ என்று அஞ்சிக் கொண்டே இருந்தேன். அதைத் தடுப்பதற்குள் உயிர் போய்வந்தது” என்றார் உமர்.

“நானும் கேள்விப்பட்டேன்; மாஷா அல்லாஹ்! நல்ல காரியம் செய்தீர்கள் உமர்! ஒரு வேளை உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயமாக இவ்வளவு துணிச்சலாக என்னால் செயல்பட்டிருக்க முடியாது!”

“நல்லவேளையாக அல்லாஹ்வின் தூதருக்கு வஹீ ஏதும் வரவில்லை” என்றார் உமர்

“இறைத்தூதர்,  ஸைனப் பின்த் ஜஹ்ஷ்வுடன் திருமணம் முடித்து, வலீமா விருந்தின் பொழுது, இறைத்தூதரின் மறைவிற்குப் பிறகு அவரது மனைவியர்களை மணந்து கொள்வேன் என்று தல்ஹா பின் உபைதுல்லாஹ் கூறியது நினைவிருக்கிறதா?”

“ஆமாம்! அவனொரு பைத்தியக்காரன்! அவன் அப்படிக் கேட்டவுடன், ”… நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும். குர்ஆன் 33:53) என்ற வசனம் இறங்கியது. ஆம் அது நன்றாகவே நினைவிருக்கிறது. சரி ...அதற்கென்ன?”

 ”அதற்கெல்லாம் உடனே இறங்கிய வஹீ, இத்தனை குழப்பம் நிறைந்த சூழலில் இறக்கப்படாதது ஆச்சரியமளிக்கிறது!”

“… …!?”

”ஒவ்வொரு விஷயத்திற்கும் வஹீ இறக்கிக் கொண்டிருக்கும் அல்லாஹ், இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பதன் காரணம் புரியவில்லை!”

”என்ன நிகழுமோ என்ற அச்சத்தில் இருக்கிறேன் நீங்கள் வஹீ வரவில்லையே என்று வருத்தப்படுகிறீர்களா? ஒருவேளை இறைச்செய்தியை தாங்குமளவிற்கு தூதரின் உடல் நிலை இல்லையென்பதால் இருக்கலாம்!”

“அப்படியில்லை உமர்! வஹீ நேரடியாக மட்டுமே வரவேண்டுமென்பதில்லை. இறைத்தூதரின் மனதில் உள்ளுதிப்பாக, கனவாகக்கூட வரலாம்!”

உமர் திருதிருவென்று விழித்து,

“ஒருவேளை அப்படி வந்த செய்தியைத்தான் தடுத்துவிட்டேனோ என்னவோ?”

”அப்படியிருந்தால், இறைத்தூதர், அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றத் தவறியவராகிவிடுவார்!”

”... ...!?”

”நம் மீது எவருக்கும் சந்தேகம் வரவில்லையா?”

”சந்தேகமென்ன... என் மீது சிலருக்கு வருத்தம்கூட இருக்கலாம். தற்சமயம் அதைக் கண்டும் காணாதவாறு கடந்து செல்ல வேண்டியதுதான்”

”இல்லை உமர் நாம் அப்படி இருக்க முடியாது. இனி நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இறைத்தூதரின் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருப்பதைப் போல காண்பித்துக் கொள்ள வேண்டும்!”

“சரி… இனி பாருங்கள் என் நடவடிக்கையை!”

“ஆமாம்… குர்ஆனில் ஏதோ இருப்பதாகக் கூறினீர்களே… ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதுபற்றி குர்ஆனில் இருக்கிறதா என்ன?”

“யாருக்குத் தெரியும்? நான் அப்படிச் சொன்னதால்தான் அந்த சச்சரவிலிருந்து தப்பிக்க முடிந்தது”

”குர்ஆனில் என்ன இருக்கிறது என்பதைத் தெரியாமலேயே ’உங்களிடம்தான் குர்ஆன் இருக்கிறதே. இறைவேதமே நமக்குப் போதும்’ என்று சொல்லும் துணிச்சல் உங்களிடம் மட்டும்தான் இருக்கிறது!” என்று சிரித்தார்

”அப்பொழுது ஆயிஷாவும் அங்கிருந்தார். நிலைமையை கருத்தூண்றி கவனித்து வருகிறார். இந்த விஷயத்தில் அவர் நமக்கு மிகப் பெரிய பலம்!”

“அல்லாஹ்வின் தூதர் என்ன எழுதவிரும்பினார் என்பதைப்பற்றி நமது மகள்களின் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்வோமா?” இது அபூபக்ர்

“அதைப்பற்றிக் கேட்டு மீண்டும் குழப்பத்தை விலை கொடுத்து வாங்க வேண்டுமா? நீங்கள் அல்லாஹ்வின் தூதரை சந்தித்தாலும் இதைப்பற்றி பேச வேண்டாம்!”

“ஒருவேளை நமக்குச் சாதகமாக எழுத விரும்பியிருந்தால்…!”

“அலீ பின் அபிதாலிப்பிற்குச் சாதகமாகக் கூட எழுத விரும்பியிருக்கலாம்!”

அபூபக்கர் அமைதியாக இருந்தார்.

“அல்லாஹ்வின் தூதரது நாட்களை எண்ணிவிடலாம். உடல்நிலையைப் பார்த்தால் அவர் முழுவதுமாக ஏழுநாட்களைக் நிறைவு செய்வதுகூட சந்தேகம்தான்!”

“அதுவரை இந்த மரணசாசனப் பிரச்சினை அமைதியாக இருக்குமா? ஒருவேளை ஃபாத்திமா வந்து எதையாவது கிளறிவிட்டால்....?” என்று அபூபக்ர் புருவத்தை சுளித்தார்.

“இன்று நிகழ்ந்த கூச்சலும் குழப்பமும் அல்லாஹ்வின் தூதருக்கு உண்மையைப் புரியவைத்திருக்கும். இல்லையெனில் “மரணசாசனம் எழுதும் பணியை விட நான் இப்போதுள்ள நிலையே இருப்பது சிறந்தது” என்று கூறியிருக்க மாட்டார். எனவே இனி இதைப்பற்றி அவர் வெளிப்படையாகப் பேச முயற்சிக்கமாட்டார் என்று நினைக்கிறேன்!”

“இருந்தாலும் நீங்கள் இதை சற்று மெண்மையாகக் கையாண்டிருக்கலாம்!”

”பதிமூன்றாண்டுகள் அமைதியாக இருந்தபொழுது நமது எண்ணிக்கை நூற்றி ஐம்பதிற்கும் குறைவு. ஆனால் இன்று மாபெரும் சம்ராஜ்ஜியம் நமது கைகளில், மெண்மையான போக்கில் இருந்திருந்தால் கஅபாவைச் சுற்றி பிச்சைதான் எடுத்துக் கொண்டிருப்போம்; இந்த மாபெரும் சாம்ரஜ்ஜியமே உருவாகியிருக்காது. !”

”இல்லையென்று சொல்லவில்லை! என்ன இருந்தாலும் அவர் நமது மருமகன்!”

”மருமகன்...?”

என்று  கடகடவென சிரித்தவாறு அபூபக்கரிடம்,

“இன்னும் அந்த எண்ணம் உங்களிடம் இருக்கிறதா...?” என்றார்

”ஆயிஷாவையும் ஸஃப்வானையும் இணைத்து பேசப்பட்ட விஷயத்தில் இறைத்தூதர் நடந்து கொண்ட விதத்தை என்னாலும் மறக்க முடியவில்லை!”

“ஆயிஷா, குற்றமற்றவர் என்பதாக அல்லாஹ்வே வஹீ அறிவித்து விட்டானே?”

“வஹீ எப்பொழுது வந்தது? எதனால் வந்தது?”

“.... ...!?”

“ஒரு மாதத்திற்குப் பிறகு, கஸ்ரஜ் குலத்தினரும் அவ்ஸ் குலத்தினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்ட பொழுது வேறுவழியில்லாமல் ஆயிஷா குற்றமற்றவர் என்பதாக அறிவிக்கப்பட்டது. என் மகளின் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையிருப்பதாக இறைத்தூதர் நம்பியிருக்கிறார்; இதன் விளைவு அலீ பின் அப்தாலிபும், ஆயிஷாவை விவாகரத்து செய்வதற்கான ஆலோசனையை இறைத்தூதருக்கு வழங்குமளவிற்குச் சென்றிருக்கிறது! இதன் காரணமாக எனது மகள் ஆயிஷா, அலீயுடன் தானாக முன்வந்து பேசுவதையே நிறுத்திவிட்டாள்(தபரி, V-9, P 170). இதுதான் தன் மனைவியின் மீது ஒரு கணவன் கொண்டிருக்கும் நம்பிக்கையா?”

“இதை நீங்கள் வெளிப்படையாக அவரிடமே கேட்டிருக்கலாமே?”

“இறைத்தூதர் உட்பட எல்லோருமே என் மகளை நடத்தை கெட்டவள் என்று சொல்லும் பொழுது ஒரு தந்தையாக என் மனம் அடைந்த வேதனையை அனுபவித்தால் மட்டுமே புரியும்! பொதுவாகவே அவரிடம் நான் எந்த விவாதமும் செய்ததில்லை. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் இருந்ததால்தான் சிறுகுழந்தை என்பதைக் கூட மறந்து ஆயிஷாவை அவருக்குத் திருமணம் செய்து வைத்தேன்.  ஆனால் என் மகள் விஷயத்தில் அவர் நடந்து கொண்டவிதத்தை என்னால் ஒரு பொழுதும் மறக்க முடியாது!”

“இறைத்தூதருக்கு இன்னும் தன் மனைவிகளின் மீது நம்பிக்கை வரவில்லை. இப்பொழுதும்கூட அவர்கள் தனக்குத் துரோகம் செய்விடுவார்களோ என்று அஞ்சுகிறார்!”

“ஆமாம்!”

“இறைத்தூதரின் மனைவியர்கள் வெளியில் வரும் பொழுது தங்களை ஆடைகளால் மறைத்துக் கொண்டு வருமாறு கட்டளையிட அவரைக் கேட்டுக் கொண்டதும் அதற்காகத்தான்!”

அபூபகர் அமைதியாக இருந்தார்.

”ஆட்சியாளர் விஷயத்தில் அலீ பின் அபிதாலிப், பெரிதாக ஆர்வம் காண்பிக்காமல் ஏன் அமைதியாக இருக்கிறார்?” என்று பேச்சை வேறு திசைக்கு மாற்றினார் உமர்.

“அலீ தனக்கென்று பெரிதாக ஆதரவாளார்களை உருவாக்கிக் கொள்ளவில்லை. அதுவும் நமக்குச் சாதகம்தான்” என்றார் அபூபக்கர்.

“அலீயை ஆதரிக்கக் கூடியவர்கள் இல்லையென்று சொல்ல முடியாது. அலீயை சிலர் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அஹ்லுல் பை’த் அடைப்படையில் ஆட்சிப் பொறுப்பு தம்மிடம்தான் வருமென்று நினைக்கிறார் போலும்!”

”எதற்கும் நாம் எச்சரிக்கையுடன் இருப்பதே சிறந்ததாகத் தோன்றுகிறது!”

”இறைத்தூதரைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்ததில், முக்கியமான செய்தியைக் கூற மறந்துவிட்டேன்”

“என்ன செய்தி?”

“யமாமாவிலிலும் ஏமனிலும் நம் எதிரிகளின் கை ஓங்கியிருப்பதாகத் தெரிகிறது!”

“முஸைலிமாமா?”

“ஆம் அவனுடன் அஸ்வத் குலமும்! முஸைலிமாவின் கை யமாமாவிலும் அஸ்வத் குலத்தினரின் கை ஏமனிலும் ஓங்கியிருக்கிறது!”

”இப்பொழுதுதான் சன்ஆ-வில் தன்னை இறைத்தூரென்று கூறிக் கொண்டு திரிந்த அஸ்வத் அன்ஸியின் கதையை முடித்தோம்!”

“அதுமட்டுமல்ல முஸைலீமா ஏற்கெனவே தன்னை இறைத்தூதரென்று கூறிக் கொண்டிருப்பவன். ஏமனில்  அப்துல் கைஸ் என்பவனும்  சஜா என்ற பெண்மணியும் தங்களை இறைத்தூதர்களாக பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்றன்ர். நமது இறைத்தூதர் இறந்து விட்டால் இவர்களது கை இன்னும் ஓங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது!”

“நமது இறைத்தூதரின் உடல்நிலை குறைத்து அவர்களுக்கு செய்தி சென்றிருக்கும்!”

”இவர்களை நாம் அழிக்கவில்லையெனில் தெருவிற்கு நான்கு இறைத்தூதர்களும் எட்டு இறைவேதங்களும் தோன்றிவிடும்!”

“... ...!?”

“ஐவேளைத் தொழுகை மூன்றாக குறைத்துவிட்டதாக அல்லாஹ் முஸைலிமாவிற்கு  வஹீ அனுப்பியிருக்கிறானாம்!”

“இந்த சூழலில் இறைத்தூதரை விட்டு நாம் விலகினால், பிறகு மதீனா நம் கட்டுப்பாட்டில் இருக்காது!” என்றார் அபூபக்ர்

”இஷா தொழுகைக்கான நேரம் நெருங்குகிறது அப்படியே இறைத்தூதரையும் சந்தித்துவிட்டு திரும்பலாம்!” என்றார் உமர்

இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினர்.
++++++


ஆயிஷாவின் இல்லத்தில்,

இஷா தொழுகைக்கான அழைப்பு ஒலித்துக் கொண்டிருந்தது.

மயக்க நிலையில் இருந்த முஹம்மதுவின் இமைகள் மெல்ல அசந்தது. சுற்றிலும் யாரோ நிற்பதைப் போல தோன்ற, மிகுந்த சிரமத்துடன் கண்களைத் திறந்து, கண்களை அசைத்து பார்த்தார். மனைவியர்கள் முஹம்மதுவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். மெதுவாக  எழுந்து உட்கார்ந்தார். குளித்துப் புத்துணர்வுடன் இருக்கும் ஆயிஷாவை நோக்கினார்.

“தொழுகைக்கு செல்ல வேண்டும்! குளிப்பதற்கு தண்ணீர் ஏற்பாடு செய்!” என்று சொல்வதற்குள் அவரது உயிர் போய்வந்தது. பெருமூச்சு வாங்க மீண்டும் படுக்கையில் சாய்ந்தார்.

”இதோ இப்பொழுது வந்து விடுகிறேன்” என்று அங்கிருந்து நகர்ந்து ஹஃப்ஸாவுடன் சென்றார் ஆயிஷா. இருவரும் தண்ணீர் நிரம்பிய தோல்பைகளைக் சுமந்து கொண்டுவந்து கல்தொட்டியின் அருகே வைத்தனர். அதற்குள் மற்ற மனைவியர் முஹம்மதைக் கைத்தாங்கலாக அழைத்து வந்துவிட்டனர் என்று சொல்வதைவிட இழுத்து வந்துவிட்டனர் என்று சொல்லலாம். அவரது ஆடையைக் களைந்து கல் தொட்டிக்குள் அமரச் செய்தனர். அவரது ஆடையெங்கும் ஈரவட்டங்கள். குளிப்பதற்குமுன் அவர் வழக்கமாகச் செய்யும் சடங்குகளைச் செய்தார். ஹஃப்ஸா தண்ணீர் ஊற்றிக் கொடுக்க, தளர்ந்து போயிருந்த தனது உறுப்பை முஹம்மது நன்றாக தேய்த்துக் கழுவினார்; எல்லோரும் ஆயிஷாவை ஒருமாதிரியாக நோக்கி,

”இப்பொழுதுமா…?” என்று புருவத்தைச் சுளித்தனர். (*)

“நான் என்ன செய்வது, அவர்…தான்…!” என்று இழுத்தார் ஆயிஷா

”அவரா..?”  என்றவாறு “க்ளுக்” என்று சப்தமில்லாமல் சிரித்தார் ஹஃப்ஸா.

“இவர்களுக்கு எப்பொழுதுமே விளையாட்டுதான்!” என்று கடிந்து கொண்டார் ஜைனப்.

முஹம்மது ’ஒளு’ என்ற சடங்கை செய்து முடித்திருந்தார். அவரால் தண்ணீரை அள்ளி ஊற்றிக் கொள்ள முடியவில்லை. மனைவியர் அனைவரும் சேர்ந்து முஹம்மதைக் குளிக்கச் செய்தனர்.

மீண்டும் மயங்கிச் சரிந்தார் முஹம்மது. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தார்.

“மக்கள் தொழுது விட்டனரா?” என்றார்

“இல்லை… உங்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர்” என்றார் ஆயிஷா.

“குளித்துவிட்டு தொழுகைக்கு செல்ல விரும்புகிறேன். எனக்காக தண்ணீர் கொண்டுவாருங்கள்” என்றார்.

“தண்ணீர் தயாராக இருக்கிறது” என்றார் ஹஃப்ஸா.

மீண்டும் முதலிலிருந்து குளித்து தயாரானார், ஆயிஷாவை நோக்கி,

மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூபக்ரிடம் சொல்!

ஆயிஷா, ஹஃப்ஸாவிடம் கிசுகிசுப்பாக,

அபூபக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே, தொழுகை நடத்தும்படி உனது தந்தையார் உமருக்குக் கட்டளையிடுமாறு இறைத்தூதரிடம் சொல்!” என்றார்.

ஹஃப்ஸா, ஆயிஷா கூறியதைப் போன்றே முஹம்மதிடம் கூற, நோயின் கடுமையும் அவரது இயல்பான குணமும் ஒன்று சேர,

”நிறுத்து..! நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் அழகைக் கண்டு கையை அறுத்த தோழிகள் போன்றவர்கள்; மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் கூறுங்கள்!” என்றார் கோபமாக ( தபரி, V-9, P 182).

அவ்வாறு அவர் கூறியது தொழுகைக்காக பள்ளிவாசல் வந்திருந்த அபூபக்ர் உமர் உட்பட அனைவரது காதுகளிலும் விழத் தவறவில்லை.

உமர் எதையோ சொல்ல முயன்றார். வேண்டாம் என்பதைப் போல கைகளால் சமிக்கை செய்த அபூபக்கர் தொழுகையைத் துவக்குவதற்குத் தயாரானார்.

ஆயிஷாவின் வீட்டிற்குள்...

முஹம்மது தலையை பிடித்துக் கொண்டு முனங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ஆயிஷாவும் ஹப்ஸாவும் தொழுகைக்குச் செல்லாமல் நின்று கொண்டிருந்தனர்.

ஹஃப்ஸா, ஆயிஷாவை முறைத்து பார்த்து,

உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை” என்றார். (புகாரி 679)

”இன்று காலை உனது தந்தையார் நடந்து கொண்ட விதத்தை இறைத்தூதர் இன்னும் மறக்கவில்லை போலிருக்கிறது!” என்று கிசுகிசுத்தார்.

”வேண்டுமென்றேதான் இப்படிச் செய்தாயா?”

“இல்லை, ஹஃப்ஸா… உனது தந்தையாரைப்பற்றி இறைத்தூதர் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளவோ அப்படிச் செய்தேன். உமர் என்னுடன் இருக்கிறார், எனக்குப் பிறகு உமரைப் பின்பற்றுங்கள் (தபரி V-9, P 171) என்று கூறிக் கொண்டிருந்தவர் திடீரென இப்படிப் பாய்கிறாரே?”

நோயின் தாக்கம் சற்று குறைவதைப் போல உணர்ந்த முஹம்மது, அந்தப் பெண்களை நோக்கி,

“என்னை அழைத்துச் செல்வதற்கு யாரையாவது வரச்சொல்லுங்கள்” என்றார்.

தொழுகைக்காக வந்திருந்த இப்ன் ஷியாவும் இப்ன் சுன்னாவும் முண்டியடித்துக் கொண்டு ஓடினர். தரையில் கால்கள் இழுபட அந்த இரண்டு மனிதர்களுக்கு இடையே தொங்கிக் கொண்டு பள்ளிக்குச் சென்றார்.

முஹம்மது வருவதை உணர்ந்த அபூபக்ர், தொழுகையிலிருந்து பின்வாங்க முயன்றார். அவரை நோக்கிச் சைகை செய்துவிட்டு அபூபக்ரின் இடப் புறம் அமர்ந்தார். அபூபக்ர் நின்று தொழ, முஹம்மது உட்கார்ந்து தொழுதார். மீண்டும் ஆயிஷாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மக்கள் கலைந்து சென்று கொண்டிருந்தனர். உமர், அபூபக்கரிடம் வந்து,

“இறைத்தூதர் கூறியதைக் கவனித்தீர்களா...? நமது மகள்களும் அந்நிய ஆண்களின் அழகில் மயங்குபவர்களாம்!” என்று கிசுகிசுத்தார்.

“இதையெல்லாம் கேட்டும் அமைதியாக இருக்க வேண்டும்!” என்று கடுகடுத்தார்.

”வேறுவழி...?”

இருவரும் பேசிக்கொண்டே மஸ்ஜிதைவிட்டு வெளியில் வந்தனர்.  குதிரை தயாராக நின்று கொண்டிருந்தது.  அபூபக்ர் குதிரையில் ஏறியவாறு,

”இங்கு வேண்டாம் உமர்! நாம் விட்டிற்குச் சென்று விடுவிடுவோம்!” என்றார் உமர் குதிரையின் மீது தாவி அமர்ந்தார். வினாடிகளில் இருவரும் மின்னலென மறந்து போனார்கள்.

இருவரையும் தூரத்திலிருந்து இப்ன் ஷியாவும் இப்ன் சுன்னாவும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
++++++


இப்ன் ஷியாவும் இப்ன் சுன்னாவும் கூடாரத்தை வந்தடைந்தனர்.  மங்கலான விளக்கொளியில், ஓலைகளில் எழுதப்பட்டதை வாசித்துக் கொண்டிருந்தான் அப்து முனாஃபிக். அவர்களைப் பார்த்ததும், புன்னகைத்தவாறு ஓலைகளை கட்டி எடுத்துவைத்தான்.

“அல்லாஹ்வின் தூதருக்கு உமரின் மீது கோபமா அல்லது தனது மனைவியர்கள் மீது கோபமா என்பது புரியவில்லை!” என்றான் இப்ன் சுன்னா.

”நிறுத்து! முதலில் உணவு பிறகு பேசலாம்” என்றான் முனாஃபிக்.

அகலமான பாத்திரத்தில் ரொட்டியையும், குழம்பையும் கொண்டுவந்து வைத்தான்.

“இது எங்கிருந்து?”

“நீங்கள் தொழுகைக்குச் சென்றிருந்த பொழுது நான்தான் சமைத்தேன்.” என்றான் முனாஃபிக்.

மூவரும் ஆளுக்கொரு பக்கத்திலிருந்து உணவை சாப்பிட ஆரம்பித்தனர்

“ம்ம்... இப்பொழுது சொல்லுங்கள் உமருக்கு ஆயிற்று?” என்றான் முனாஃபிக்

“இன்றைய இஷாத் தொழுகையை நடத்துவதற்கு ஹஃப்ஸா உமரின் பெயரைக் கூற, இறைத்தூதர் தனது மனைவியர்களை நோக்கி’ நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின்அழகைக் கண்டு கையை அறுத்த தோழிகள் போன்றவர்கள்’ என்று கோபமாக சப்தமிட்டுக் கொண்டிருந்தார்” என்றான் ஷியா.

“அப்படியா கூறினார்?”

”ஆம்!”

“இது தரக்குறைவான வார்த்தைகள்!”

“எப்படிச் சொல்லுகிறாய்?” என்றான் இப்ன் ஷியா

“யூஸுப்பின் அழகில் மயங்கிய முதல் தோழி, அவரது எஜமானரின் மனைவிதான்.  அந்தப் பெண், யூஸுப்பை வற்புறுத்தி படுக்கைக்கு அழைத்தார், அதை மறுத்து வெளியேறிட முயன்றபொழுது அந்தப் பெண் விரக தாபம் மேலிட யூஸுப் நபியின் மீது பாய்ந்து அவரது சட்டையைக் கிழித்தர். மற்றவர்கள் தோழிகள் யூஸுப்பின் அழகில் மயங்கி, மெய்மறந்து தங்களது கைவிரல்களை வெட்டிக் கொண்டவர்கள்!” என்றான் முனாஃபிக்.

“ம்ம்... இதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்!” என்றான் சுன்னா

“இது மிகக் கடுமையான, கேவலமான வார்த்தை! இறைத்தூதர் தனது மனைவிகள் அந்நிய ஆண்களிடம் மயங்கி தனக்குத் துரோகம் செய்கின்றனர் என்று நம்புகிறார் போலும்!” என்றான் முனாஃபிக்

“ஏய்... என்ன சொல்லுகிறாய்?” என்றான் இப்ன் ஷியா

”இறைத்தூதர் தனது மனைவியர்களை நோக்கி, நீங்களெல்லாம் அழகிய ஆண்களைக் கண்டால் அவனிடம் மயங்கி அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயங்காதவர்கள் என்பதைத்தான் உவமை நடையில் சொல்லியிருக்கிறார்!”

மற்ற இருவரும் முகங்களை சுளித்தனர்.

“இறைத்தூதர் கூறிய உவமைக்குள் இத்தனை கேவலமான செய்தி ஒளிந்திருக்கிறதா?” என்றான் இப்ன் சுன்னா.

”அதுமட்டுமல்ல! இறைத்தூதரே இப்படிச் சொல்வதால் அல்லாஹ் கற்பித்துக் கொடுத்ததாக இருக்கலாம். அல்லது இறைத்தூதர் தனது அனுபத்திலிருந்து கூறிய கருத்தாக இருக்கலாம் அல்லது கண்ணியமான பெண்கள் மீது இவர் அபாண்டமாக பழிசுமத்துகிறார் என்றும் கூறலாம்!” என்றான் முனாஃபிக்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் இவரும் திருதிருவென்று விழித்தனர்.

“அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு சாட்சியைக் கொண்டு நிரூபிக்க முடியாது அது நம்பிக்கை சார்ந்த விஷயம் எனவே இறைத்தூதரின் மனைவிகள் அந்நிய ஆண்களில் அழகில் மயங்கக் கூடியவர்கள் என்பதை ஒப்புக்கொண்டே தீரவேண்டும். நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! என்கிறது குர்ஆன் (33:32)  வசனம். அந்நிய ஆண்களிடம் குழைந்திருக்கின்றனர் என்பதற்கு இதுவே ஆதாரம். எனவே இறைத்தூதரின் மனைவியர்கள் கண்ணியமானவர்கள் கிடையாது!”

”முனாஃபிக், உன் கழுத்தின் மேல் உனது தலையிருப்பது உனக்கு பிடிக்கவில்லையா?” என்றான் இப்ன் சுன்னா

“டேய்...! முனாஃபிக், கண்ணியமான பெண்களின் மீது நீதான் பழிசுமத்துகிறாய்! ஸஃப்வானுடன் ஆயிஷாவை இணைத்துப் பேசப்பட்ட பொழுது, இதன் மீது நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அவ்வாறு சாட்சிகளைக் கொண்டுவராத பொழுது அவர்கள்தாம் பொய்யர்கள்.(குர்ஆன் 24:13) என்று குர்ஆன் வசனம் வெளியானதை மறந்துவிட்டாயா? இறைத்தூதரின் மனைவியர்கள் மீது சாட்சிகள் இல்லாமல் பழி சுமத்துவதால் நீதான் பொய்யன்!” என்றான் இப்ன் ஷியா!

“நான் பொய்யனாவது இருக்கட்டும்! சாட்சிகளோ ஆதாரங்களோ இல்லாமல், மனைவியர்களை நோக்கி அந்நிய ஆண்களின் அழகில் மயங்குபவர்கள் என்று தரக்குறைவான வார்த்தைகளைக் கூறிய இறைத்தூதர் பொய்யரில்லையா? ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்(Q 33:58) என்று இறைத்தூதர்தானே நமக்கெல்லாம் கற்பித்துக் கொடுத்தார்? இன்று இல்லாததைக் கூறி மனைவியர்களை நோவினை செய்த இறைத்தூதரை என்ன செய்யப் போகிறாய்?”

இப்ன் ஷியா வார்த்தைகளின்றி தவித்தான்.

”நீ சொல்வதில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது!” என்றான் இப்ன் சுன்னா.

”தொழுகையை நடத்த உமரின் பெயரை ஹஃப்ஸா கூறிய பொழுதான் இவ்வாறு கூறினார் எனில் ஹஃப்ஸா, தனது தந்தையார் உமரின் அழகில் மயங்கிவிடுவாரா...? இது தந்தை மகள் உறவை கொச்சைப் படுத்துவதாக இல்லையா?” என்றான் முனாஃபிக்

”... ...!?”

“இறைத்தூதருக்கு இன்னும் அவரது மனைவியர்கள் மீது நல்ல எண்ணங்கள் வரவேயில்லை!”

“இப்பொழுதும் வரவில்லையெனில் வேறெப்பொழுது?” என்றான் இப்ன் ஷியா.

”உமர் தொழவைப்பதில் விருப்பமில்லையெனில் அதை வேண்டாமென்று மறுப்பதில் தவறில்லை; அது இறைத்தூதரின் விருப்பம். ஆனால் அதில் தனது மனைவியரையும் இணைத்துக் கேவலப்படுத்திப் பேசுவது முறையல்ல!”

”... ....!”

இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்; முனஃபிக் தொடர்ந்தான்.

“அந்நியப் பெண்களின் அழகில் மயங்கியதால்தான் இறைத்தூதருக்கு நான்கிற்கு மேற்பட்ட மனைவிகளும் எண்ணற்ற அடிமைப் பெண்களும் தேவைப்படுகிறது என்று சொல்லலாமா?”

“அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய சிறப்பு அனுமதி! அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் நடக்கிறது”

“அப்படியானால் இன்று அவர் தனது மனைவியரைக் கேவலமாகப் பேசியதும்கூட அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் நடந்திருக்கிறது!”

“முனாஃபிக் நீ இறுதியில் இறைத்தூதரையே குறைகாணுமிடத்திற்கு வந்துவிட்டாய்!” என்றான் இப்ன் ஷியா.

”இது கணவன் மனைவிக்கு இடையே நிகழும் சாதாரண உரையாடால். இதை இத்தனை ஆராய்ச்சி செய்ய வேண்டுமா?” என்றான் இப்ன் சுன்னா.

“எது சாதரண உரையாடல்?”

“... ...!”

”மனைவியை நோக்கி, நீ அந்நிய ஆண்களின் அழகில் மயங்கி, அவர்களிடம் குழைந்து, குழைந்து பேசுபவள் என்று தரங்குறைந்த வார்த்தைகளால் புண்படுத்துவது சாதரண உரையடலா? இப்படித்தான் நீயும் உங்கள் வீட்டுப் பெண்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாயா?”

”இல்லை...!”

”இதே வார்த்தகளை இறைத்தூதர் தனது மகள் ஃபாத்திமாவைப் பார்த்து சொல்வாரா?”

“சொல்லமாட்டார்...!” என்றான் இப்ன் சுன்னா.

”ஏன்?”

“அவர் அத்தகைய இயல்பு கொண்டவர் கிடையாது. அவர் மிக கண்ணியமானவர்!”

“அப்படியானால், இறைத்தூதரின் மனைவியராக இருக்கும் பெண்கள் இயல்பிலேயே கண்ணியமற்றவர்கள்… அப்படித்தானே?”

“இறைத்தூதர் தனது மனைவியர்களைப் பார்த்து ஏதோ தெரியாமல் சொல்லிவிட்டார். நீ எதற்காக இத்தனை போராட்டம் செய்கிறாய்? அவர் உன்னையோ உங்கள் வீட்டுப் பெண்களையோ குறித்து சொல்லவில்லையே?” என்றான் இப்ன் ஷியா

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர் (Q33:06) என்று இறைத்தூதர் நமக்குக் கற்பித்திருக்கிறார். எனது அன்னையரைக் குறைகூறியதால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை!” என்று கைகளை உயர்த்திக் கூறினான்.

“நீ இப்படிக் கூறியவுடன் அதை நாங்கள் நம்பவேண்டும்?”

”நீ முஃமினா? இல்லை ஷைத்தானா? உன்னைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை!” என்றன் இப்ன் சுன்னா

”நான் என் மனதிற்குத் தோன்றியதைச் சொல்லுகிறேன்!”

”நம் மனதில் எழுகின்ற கேள்விகள் மற்றவர்களிடமும் இருக்குமா? இல்லை நாம் மட்டும்தான் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறோமா?”

“நிச்சயமாக இருக்க வாய்ப்பிருக்கிறது வெளிப்படையாக எவரும் பேசுவதில்லை என்பதனால் நாம் அப்படிச் சொல்ல முடியாது. அபூபக்ரும் உமரும் இரகசிய கூட்டணி அமைத்திருப்பது விரைவில் வெளிப்படும் என்று நம்புகிறேன்” என்றா முனாஃபிக்.

“விளக்கவுரை பிரசங்கம் முடிந்ததா?” என்றான் இப்ன் ஷியா.

”உறக்கம் வருகிறது காலையில் பேசுவோம்” என்றவாறு வாயை அகலமாகத் திறந்து கொட்டாவி விட்டான் இப்ன் சுன்னா.

“பாத்திரத்தைக் கழுவி சுத்தப்படுத்திவிட்டு, இருவரும் உறங்கச் செல்லுங்கள்!”

“இப்படி வழித்து நக்கிய பிறகு  கழுவுவதற்கு என்ன இருக்கும்?”

”சரி... சரி... புலம்பாமல் அதில் என்ன இருக்கிறதோ அதை தை கழுவி வை!” என்று அங்கே காலை நீட்டிப் படுத்துக் கொண்டான் முனாஃபிக்.

இப்ன் ஷியா முனங்கிக் கொண்டே பாத்திரங்களை எடுத்துக் கொண்டான். தண்ணீர் இருந்த தோல் துருத்தியைத் தூக்கிக் கொண்டு அவனுக்குப் பின்னால் சென்றான் இப்ன் சுன்னா.
+++++

மறுநாள்...

அலீயின் இல்லத்தில்,

தனது நண்பர்களுடன் வாசலில் அமர்ந்திருந்தார் அலீ.

முஹம்மதை சந்தித்தையும் அவரது உடல்நலம் பற்றியும் அங்கு நிகழ்ந்தவைகளைப் பற்றியும் தனது நண்பர்களிடம் அலீ விவரித்துக் கொண்டிருந்தார். திரைக்குப் பின்னாலிருந்த ஃபாத்திமாவின் கண்களில் நீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. சோகம், அவர் முகத்தை விலை கொடுத்து வாங்கியதைப் போன்று இருந்தது. சிறுவர்கள் ஹஸனும் ஹுஸைனும் ஃபாத்திமாவின் ஆடையைப் பிடித்தவாறு அருகில் நின்று கொண்டிருந்தனர்.

“நீங்கள் ஏதாவது செய்தே ஆகவேண்டும் அபூ துராப்…!” என்றார் ஒருவர்

மேலும் சிலர் அங்கு குழுமினர். அவர்களில் சிலர்,

“அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?” என்று கவலையுடன் விசாரிக்க,

அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்" என்றார் அலீ

அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப், அலீ அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம்,

“அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு, பிறரின் அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆகிவிடப்போகிறீர்கள். இறைத்தூதர் அவர்கள் விரைவில் தம் இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களைப் பார்த்து மரணக் களையை அடையாணம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர் அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். 'இந்த ஆட்சியதிகாரம் அவர்கள் இறந்த பிறகு யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்"

நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு ஒருபோதும் அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர் அவர்களிடம் கேட்கமாட்டேன்" (புகாரி 4447)

“இல்லை அபூதூராப், இந்த விஷயத்தில் நீங்கள் அலட்சியமாக இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்! அபூபக்ரும் உமரும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்து கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள்! இறைத்தூதர் அதைக் கூறமுனைந்த பொழுது தடுக்கப்பட்டிருக்கிறார். நீங்கள் இந்த விஷயத்தில் கவனமாகச் செயல்பட்டு, அஹ்லுல் பை’த்தின் உரிமையை நிலைநாட்டவேண்டும்”

“அஹ்லுல் பை’த் பற்றி அல்லாஹ்வின் தூதர் பலமுறை தெளிவாகவே கோடிட்டுக் காண்பித்திருக்கிறார். அதை அபூபக்ரும் உமரும் நன்றாகவே அறிவார்கள்; எனவே அவர்கள் வரம்புமீறி செயல்படமாட்டார்கள்!”

“எதற்கும் நீங்கள் அல்லாஹ்வின்தூதரிடம் நேரடியாகவே கேட்டுவிடுங்கள்! வாரிசுமைபற்றி இறைத்தூதர் கூறமுனைந்த பொழுது உமர் தலைமையிலான குழு சச்சரவு செய்து தடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது”

”இறைத்தூதர் அவர்களுடன் எங்களுக்குள்ள உறவு முறை எல்லோருமே அறிந்தது. அதன் அடிப்படையின் காரணத்தால் ஆட்சி செய்யும் உரிமையை எங்களிடம் தருவதுதான் முறை! வாரிசுரிமையை கேட்டுப் பெறவேண்டுமா?”

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஃபாத்திமா என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவரது அழுகை இன்னும் அதிகமானது. அவரால் நிற்க முடியாமல் அப்படியே தரையில் அமர்ந்தார். அதை கவனித்த அலீ, அவரைச்  சூழ்ந்து கொண்டிருந்த மக்களிடம்,

”கொஞ்சம் பொருத்திருங்கள் இப்பொழுது வந்துவிடுகிறேன்!” என்று அனுமதி பெற்று வீட்டிற்குள் நுழைந்தார்.

“என்ன ஃபாத்திமா... ஏன் இப்படி அழுகிறாய்?” என்று அவரை அணைத்துக் கொண்டார்.

“என் தந்தை எத்தனையோ சிரமங்களுக்கிடையில் இந்த சமுதாயத்தை உருவாக்கினார். அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் இன்று பதவியையும் அதிகாரத்தையும் பற்றி பேசுகின்றனர். அவர் நோயின் வேதனையில் துடிப்பதைப்பற்றி இவர்களுக்கெல்லாம் கவலையில்லையா?” என்று அலீயின் தோளில் சாய்ந்தார். கண்ணீர் அலீயின் ஆடைகளை நனைத்தது.

ஆதரவாக ஃபாத்திமாவின் தலையை வருடி,

“அல்லாஹ் நம்முடன் இருக்கிறான். அவன் தனது தூதரை நோவினையிலிருந்து காப்பற்றுவான். அஹ்லுல் பை’த்தை அவன் கைவிடமாட்டான்!”

ஹஸனும் ஹுஸைனும் ஓடிவந்து பெற்றோர்களின் கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.  அவர்களைக் கையில் வாரி எடுத்துக் கொண்ட அலீ,

”இது இறைத்தூதரால் அறிவிக்கப்பட்ட அஹ்லுல் பை’த்! நிச்சயமாக அவரது விருப்பப்படி இதற்குரிய கண்ணியத்தை அல்லாஹ் வழங்குவான்! இறைத்துதரின் இந்த சமூகமும் வழங்கும்” என்றார்.

அந்த சிறிய குடும்பம் முஹம்மது கற்பித்த அல்லாஹ்வின் மீதும், அவர் உருவாக்கிய சமூகத்தின் மீதும் மாசற்ற நம்பிக்கையை வைத்தது.

பாவம் அவர்கள்! அஹ்லுல் பை’த் சந்திக்க இருக்கிற அவலங்களை அவர்கள் அப்பொழுது அறியவில்லை.
+++++


திங்கட்கிழமை காலை,




முஹம்மது தங்கியிருக்கும் ஆயிஷாவின் இல்லத்திற்கு வெளியில் கட்டுக்கடங்காத கூட்டம். எல்லோர் முகத்திலும் சோகம் தவழ்ந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் திடீரென்று சலசலப்பு,

“அலீயும், ஃபாதிமாவும் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார் ஒருவர்

கூட்டம் பிளந்து வழிவிட, அலீ முன்பாகச் செல்ல ஃபாத்திமா கால்களை தரையில் நன்றாக அழுத்தியவாறு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரது கைகளைப் பிடித்தவாறு ஹஸனும் ஹுசைனும் வந்து கொண்டிருந்தனர்.

 வீட்டிற்குள்,
உமர் நின்று கொண்டிருந்தார். ஆமாம் இந்த அபூபக்ர் எங்கே போனார்? தனது நெருங்கிய நண்பர் மரணப்படுக்கையில் இருக்கிறார் எந்த நேரமும் உயிர் பிரிந்துவிடும் என்ற சூழலில் அருகிலிருந்து நண்பருக்கு உதவ வேண்டாமா?

முஹம்மதைச் சுற்றிதைச் சுற்றி அவரது மனைவியர்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். ஆயிஷாவும் ஹப்ஸாவும் அருகருகே நின்று கொண்டிருந்தனர். ஆயிஷாவின் முகத்தில் சோகம் இருந்தாலும் குளித்த புத்துணர்வு அதையும் மீறி ஜொளித்தது.

ஆயிஷா, ஹஃப்ஸாவிடம்…

“ஃபாத்திமாவின் நடையைக் கவனித்தாயா...?”

“ஆம்... அதில் அப்படியென்ன சிறப்பு?”

“நன்றாக கவனித்துப்பார் ஃபாத்திமாவின் நடையும் இறைத்தூதரின் நடையும் நடை சிறிதும் பிசகாமல் ஒன்றுபோலவெ இருக்கும்!”

“இப்பொழுது இதுவா முக்கியம்?” என்று முறைத்தார்

ஃபாத்திமாவைக் கண்டதும் முஹம்மதின் முகம் மலர்ந்தது,

"என் மகளே! வருக!" என்று வரவேற்று தனது வலப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்.

ஃபாத்திமாவைக் தன்னருகே இன்னும் நெருக்கமாக வருமாறு சைகை செய்தார் முஹம்மது. நிகழக் கூடாதது ஏதேனும் நிகழ்திடுமோ என்று ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் பரபரப்பானர்கள்.  அருகில் நின்றுகொண்டிருந்த உமர், இருவருக்கும் கண்களால் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

ஃபாத்திமாவின் காதுகளில் முஹம்மது எதையோ இரகசியமாகச் சொன்னார். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார்.

அவருடைய பதற்றத்தைக் கண்ட முஹம்மது, ஃபாத்திமாவின் தலையைப் பிடித்துத் தாழ்த்தி, மறுபடியும் ஃபாத்திமாவிடம் இரகசியமாக இன்னொன்றை சொன்னார்.

ஃபாத்திமாவின் முகம் மலர்ந்தது.

முஹம்மதுவும் புன்னைத்தார். அதற்குள் மீண்டும் மயக்கம் அவரை ஆட்கொண்டது.

ஃபாத்திமா எழுந்து பெண்கள் குழுமியிருக்கும் பகுதிக்குச் சென்றார். ஆயிஷாவினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஃபாத்திமாவை நோக்கி விரைந்தார்.

"அல்லாஹ்வின் தூதர் மனைவியர்களான எங்களையெல்லாம்  விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். நீங்கள் அழுதீர்களே?" என்றார்.

அதற்குள் ஹஃப்ஸாவும் அங்கு வந்துவிட்டார்.

ஃபாத்திமா ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார். மீண்டும்,

"அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்?"

"அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இரகசியமாகச் சொன்னதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை"(முஸ்லீம் 4844)

கூட்டத்தை பிளந்து கொண்டு ஆர்வமாக ஓடிவந்த ஆயிஷாவின் முகம் சுருங்கி போனது. அதைவிட பெரிய ஏமாற்றம் ஹஃப்ஸாவின் முகத்தில். சிறிது நேரத்தில் நோயின் கடுமை, முஹம்மதின் மயக்கத்தைக் கலைத்தது, வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார். நோயின் கடுமை அதிகமாக அதிகமாக,  முகத்தில் போர்வையைப் போட்டுக் கொள்வது எடுப்பதுமாக இருந்தார்.

உமர், ஆயிஷாவை நோக்கி சமிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்த ஆயிஷா, முஹம்மதின் அருகில் வசதியாக அமர்ந்து அவரைத் தூக்கி தனது மடியில் கிடத்தினார்.

முஹம்மதின் உதடுகள் எதையோ முனுமுனுத்ததுக் கொண்டிருந்தது. சுற்றியிருந்தவர்கள் கூர்ந்து கவனித்தும் பயனில்லை. அவர் என்ன பேசுகிறார் என்பது எவருக்கும் புரியவில்லை. கூட்டம் விழிப்படைந்து, என்ன சொல்லியிருப்பார் என்ற ஆவலில் ஆயிஷாவின் வாயை கவனிக்கத் துவங்கியது.

கைபரில் அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது" என்று சொல்லுகிறார்”( புகாரி 4428) என்றார் ஆயிஷா.

“கைபரில் உண்ட விஷமா...?” நம்பமுடியாமல் ஒருவரையொருவர் பார்த்து கேட்டுக் கொண்டனர்.

”அன்று கைபரில், அந்த உணவை இறைத்தூதர் உண்ணவேயில்லை. அதை வெளியில் துப்பிவிட்டார். அது எப்படி பாதிப்பை உண்டாக்க முடியும்?”

“அல்லாஹ்வின் தூதர் திடகாத்திரமாக நன்றாகத்தானே இருந்தார்...? எப்படி திடீரென இத்தனை நோய்வாய்ப்பட்டார்?” என்று கூட்டதில் மெல்லிய சலசலப்பு.

உடனே ஆயிஷா,

இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. எனக்குக் கருணை புரிவாயாக. மிக்க மேலான தோழர்களுடன் என்னைச் சேர்த்தருள்வாயாக (புகாரி 5674) என்று சொல்லுகிறார்” என்றார்.

ஆயிஷா, முஹம்மதின் தலையை தனது மார்புடன் சேர்த்தவாறு அழுத்திப்பிடித்துக் கொண்டார். முஹம்மது மீண்டும் எதையோ முனுமுனுத்துக் கொண்டிருக்க, ஆயிஷாவின் பிடி மேலும் இறுகியது. முஹம்மதுவின் தலை ஆயிஷாவின் நுரையீரலுக்குள்(புகாரி 4830) சென்றுவிடும் போலிருந்தது.

தாங்க முடியாத அழுத்ததினால் திணறிக் கொண்டிருந்த முஹம்மதுவின் பார்வை தற்செயலாக ஓரிடத்தில் நிலைக்க, அங்கே ஆயிஷாவின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபூபக்ர் நின்று கொண்டிருந்தார். முஹம்மது எதையோ சொல்ல முயன்று கொண்டிருந்தார் அதை ஆயிஷா கவனித்த ஆயிஷா, தனது சகோதரன் அப்துர் ரஹ்மான் பின் அபூபக்கரிடம்,

“என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள். அப்துர் ரஹ்மானே!” என்றார்.( புகாரி 4450)

அவரும் கொடுக்க, அதை அவசர அவசரமாக மென்று முஹம்மதின்  கையில் கொடுப்பதைப் போன்று பிடித்து அவரது வாய்க்குள் திணித்து நன்றாக அழுத்திப் பிடித்துக் கொண்டார். எல்லோரும் ஆயிஷா என்ன செய்கிறார் என்பது புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். நேரம் கடந்து முற்பகலின் முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. முஹம்மதின் உடல் அசைவின்றி அமைதியாக இருந்தது.

ஆயிஷா தனது பிடியைத் தளர்த்த முஹம்மதின் உடல் சரிந்தது.  தனது முயற்சிகள் யாவும் தோல்வியுற்ற நிலையில், விழிபிதுங்க உயிரை எப்பொழுதோ விட்டிருந்தார் முஹம்மது. அதை ஆயிஷா உட்பட எவரும் அறியவேயில்லை!(முஸ்லீம் 3363)

அவரது தலையை ஒரு தலையணையின் மீது கிடத்திவிட்டு முகத்திலும் மார்பிலும் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

(சில அறிவிப்புகள், முஹம்மது, அலியின் மார்பில் சாய்ந்து உயிரை விட்டதாகக் கூறுகிறது.)
தொடரும்…

தஜ்ஜால்.

Facebook Comments

28 கருத்துரைகள்:

சிந்திக்கமாட்டார்களா said...

ஆஹ யுவார் ஹானர் முஹம்மதுவின் மரணம் இயற்கையானதும் அல்ல நோயினாலும் அல்ல கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டிருக்கிறது இந்த கொலையை மறைக்கவே தூதர்கள் கொல்லப்படமாட்டார்கள் என்று இடைசொருகளாக மார்க்கத்தில் சொருகிக்கொண்டுள்ளார்கள்
கேள்விகுறியாகியிருக்கும் முஹம்மதின் மரணத்தை வஉம் ரமலானில் கேள்வியாக எழுப்பினால் என்ன ?நம்ம பிஜைக்கும் புதிய ரமலான் உரை கிடைக்குமே பல ஆண்டுகாலமாக ரமலானில் அரைத்த மாவையே அரைக்கிறார் !
.
.அருமை சகோதரர் தஜ்ஜாலுதீன்!

இந்தியன் said...

மர்ம நாவல் படிப்பது போன்ற உணர்வு. அருமையான எழுத்து நடை. குரான் மேல் எனக்கு நம்பிக்கை இருந்தாலும், உங்கள் பதிவைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அதிலும் இந்தத் தொடர் அருமையாக் இருக்கிறது. அருவெறுக்கத்தக்க ஆபாச வார்த்தைகள் இல்லாதது மகிழ்ச்சி. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

தஜ்ஜால் said...

வாங்க சாதிக் சமத்,

//இந்த கொலையை மறைக்கவே தூதர்கள் கொல்லப்படமாட்டார்கள் என்று இடைசொருகளாக மார்க்கத்தில் சொருகிக்கொண்டுள்ளார்கள் //

3:144. முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா?...

முஹம்மது கொல்லப்படலாம் என்கிறது மேற்கண்ட குர்ஆன் வசனம். எனவே அவரது மரணத்தைச் சுற்றியிருப்பவைகளை கவனத்தில் கொண்டால் அவரது மரணம் கொலை என்பது தெளிவு!

தஜ்ஜால் said...

வாங்க இந்தியன்,

உங்களது வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி!
உண்மையைச் சொல்லிவிடுகிறேன். நாவல் வடிவில் எழுத வேண்டுமென்று செய்த முதல் முயற்சி ’மீண்டும் ஒரு மிஹ்ராஜ்’தான். அதன் பிறகு இந்தத் தொடர். 18+ தவிர்க்க வேண்டுமென்று நிறைய பேர்கள் சொன்னார்கள் அதைப் போல இன்னும் குறைகள் இருக்கும் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

நான் படித்தவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும், முஃமின்களிடம் மறைக்கப்பட்ட இந்த வரலாற்றுச் செய்திகளை, கூடுமானவரையில் மிக எளிமையாகச் சொல்லி அவர்களைச் சிந்திக்க செய்வதற்காகவும்தான் இந்த முயற்சி!.

ஆன்மஞானம் said...

ஹதீஸ் மற்றும் குரானை தாங்கிப்பிடிக்க இப்ன் சுன்னாவும் இப்ன் ஷியாவும் . தஜ்ஜாலின் யதார்த்தமான கேள்விகளை கேட்க முனாபிக். பாத்திரப்படைப்பு அருமை.

நபி ஒரு சாதாரண மனிதர் என்ற பார்வையில் முனாபிக் உரையாடுகிறான். தொழுவதை விட மற்ற இருவருக்கும் உணவு சமைத்து நற்செயல் புரிகிறான் முனாபிக். கூச்சமேயில்லாமல் உடல் உழைப்பின்றி உண்கின்றனர் மற்றவர்கள். இன்றும் இந்த நாத்திகர்களின் உழைப்பு மதவியாதிகளுக்கு தேவைப்படுகிறது. மிகச்சிறந்த சூழல் உணர்த்தும் நடை.

இவ்விடத்தில் ஒரு கேள்வி

நபி மறைவுக்குப்பின்னர் குரான் வெளிப்பாடு கிடையாது. அது ஏன் . நபியின் மறைவோடு குரானின் நோக்கம் நிறைவேறி விட்டதா. அல்லது நபியின் உதவியின்றி அல்லாவால் முஸ்லிம்களை தொடர்பு கொள்ளமுடியாத வலிமை குன்றியவன் ஆகிவிட்டானா?

ஒரு திட்டமிடப்பட்ட மதசாம்ராஜ்யம் நிறுவுனரின் மறைவுக்குப்பின் என்ன ஆகவேண்டும் என்ற அறிதல் அறிவு இல்லாதது நபிக்கா அல்லது அல்லாவுக்கா?

ஊராரிடம் எடுபட்ட போதனைகள் நபியின் குடும்பத்தாரிடம் ஏன் எடுபடவில்லை?

ஆக நபியின்றி அல்லாவால் செயல்படமுடியாதா.
அவனது வார்த்தைகள் என சொல்லப்படும் குரானை விட வலிமை குன்றியவனா அல்லாஹ்?

தஜ்ஜால் said...

@ ஆன்ம ஞானம்,
உங்களது பாராட்டுகளுக்கு நன்றி!

//நபி மறைவுக்குப்பின்னர் குரான் வெளிப்பாடு கிடையாது. அது ஏன் . // நம்பிக்கை அடிப்படையில் நோக்கினால், தூதுத்துவம் நிறைவேறிவிட்டது. மேற்கொண்டு வஹீ அவசியமில்லை.
ஆனால் //நபியின் மறைவோடு குரானின் நோக்கம் நிறைவேறி விட்டதா// என்றால், ஆம்...! அவரைப் பொறுத்தவரையில் நோக்கம் நிறைவேறிவிட்டது. அதனால் இந்த மார்க்கம் நிறைவு பெற்றதாக 5:03 குர்ஆன் வசனத்தைச் சொல்லிக் கொண்டார். அதன் பின்னர்தான் தன்னுடைய போதனைகளின் பலவீனத்தைப் புரிந்தது கொண்டார். அதை சரிசெய்யக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை.
//நபியின் உதவியின்றி அல்லாவால் முஸ்லிம்களை தொடர்பு கொள்ளமுடியாத வலிமை குன்றியவன் ஆகிவிட்டானா?// அல்லாஹ் தன்னைத் தவிர வேறு எந்த உருவிலும் மனிதர்களைத் தொடர்புகொள்ளக்கூடாது என்பது முஹம்மதுவின் விருப்பம். அதனால்தான் அவரது காலத்தில் இருந்த முஸைலிமா போன்றவர்கள் இறைத்தூதரக அங்கீகரிக்கப்படவில்லை. முஹம்மதுவின் விருப்பமே அல்லாஹ்(!?)வின் விருப்பம்!
அல்லாஹ் தொடர்ந்து மனிதர்களைத் தொடர்பு கொண்டிருந்தால் முஹம்மதுவின் வார்த்தைகளுக்கு மதிப்பு ஏது? இவர்கள் இஞீலையும் தவ்ராத்தையும் குப்பைத் தொட்டிக்கு எறிந்ததைப் போன்று, குர்ஆனை இன்னொருவன் எறிந்திருப்பான். இறுதி நபி இறுதி வேதம் என்ற கதை, தக்கவைத்தல் என்ற நிலைக்காகத்தான்! இந்த விஷயத்தில் முஃமின்கள் மிகப்பெரிய புத்திசாலிகள். பாம்பின் கால் பாம்பறியும்!!!

தஜ்ஜால் said...

// ஒரு திட்டமிடப்பட்ட மதசாம்ராஜ்யம் நிறுவுனரின் மறைவுக்குப்பின் என்ன ஆகவேண்டும் என்ற அறிதல் அறிவு இல்லாதது நபிக்கா அல்லது அல்லாவுக்கா?//

முஹம்மதின் இஸ்லாம் உள்ளூர் வியாபாரம்தான். குர்ஆனின் பல வசனங்கள் மிகத் தெளிவாக அதைக் கூறுகின்றன, பின்னர் மதீனா, பின்னர் அரேபியா என வளர்ச்சி பெறுகிறது. தனக்குப்பின்னால் மிகப்பெரிய குழப்பம் வரப்போகிறதென்பதை இறுதிக் காலத்தில்தான் உணர்ந்திருக்கிறார். பாவம் அதை சரிசெய்ய முடியாமல் போய்ச் சேர்ந்துவிட்டார். முஹம்மது சொல்வதை மட்டும்தான் அல்லாஹ் கேட்பான். பிற்கால திட்டம்பற்றி முஹம்மது சொல்லவில்லை அதனால் அல்லாஹ்வும் சொல்லவில்லை! ஏனென்றால் அல்லாஹ்வும் முஹம்மதுவும் வேறல்ல!

தஜ்ஜால் said...


// ஊராரிடம் எடுபட்ட போதனைகள் நபியின் குடும்பத்தாரிடம் ஏன் எடுபடவில்லை? //

அல்லாஹ்வும் முஹம்மது யாரென்ற உண்மை அவர்களுக்குதான் தெரியுமே! என்னதான் திட்டமிட்டு ஊரை ஏமற்றிக் கொண்டிருந்தாலும், அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தவுடன் அவர்களையும் அறியாமல் சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது. அதை மறைக்க இவர்கள் செய்திருக்கும் தகடுதத்தம் குர்ஆன்!!! ஊர்வாயை மூடமுடியாது என்பார்கள் ஹதீஸ்கள் வடிவத்தில் வெளிவந்துவிட்டது!!! அதைமறைக்க மறுபடியும் ஹதீஸ்கள் மறுபடியும் ஹதீஸ்கள். ஹதீஸ்க்ளை சரிகட்ட ஸஹீஹ், ளைஃப், மவ்லுவு என்று ஹதீஸ்கலை!!!

படித்து படித்து முடிவில்லாம போய்க் கொண்டே இருக்கிறது!!!

ஆன்மஞானம் said...

மேற்கண்ட நிகழ்வுகள் நபியின் மரணம் இயல்பானதல்ல எனும் கருத்தை நிலைநாட்டுகிறது.
நபியின் வாழ்க்கை தரும் படிப்பினை என்ன.
அல்லா பெரிய சூழ்ச்சிக்காரன் என்ற போதிலும் நபியின் குடும்பத்தினரின் சூழ்ச்சிக்கு முன்னால் தோற்று விட்டானா?

அல்லாவின் கையாலாகாத்தனத்தை பார்க்கும்போது நபியோடு சேர்ந்து அவனும் மரித்து விட்டான் என்றே கருத வேண்டியுள்ளது.
நபியும் இல்லை அல்லாவும் இல்லை

பிசாசுகுட்டி said...

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை..
குரான் என்பதே சல்லுவின் மரணத்துக்கு பின் தொகுக்கப்பட்ட உளறல்கள் தானே - அதிலும் பல்வேறு தொகுப்புகளை வேண்டும் வேண்டாமென்று எரித்தது போக மீதமுள்ள தொகுப்பு தானே இக்காலத்தில் இருக்கிறது.. அதனால் அல்லாவின் முழுமையடைந்த புத்தகம் என்று எப்படி சொல்ல முடியும். அப்படி சேர்த்தல் நீக்கல் இருக்கும் போது முழுமை அடைந்தது என்று சொன்னது அல்லாவா அல்லது குரானை தொகுத்தவரா ?
குரான் வரிகள் நீக்கப்பட்டன என்று வரும்போது இதுவும் மனிதர்களால் திருத்தப்பட்ட வேதம் என்று ஆகிவிட்டதே...
தொகுக்கப்படாத குரான் வரிகளை வைத்துகொண்டு எப்படி சல்லு எப்படித்தான் காலத்தை ஓட்டினாரோ (வடிவேலு காமெடி தான் நியாபகத்துக்கு வருது - அது நான் சொன்னது போனமாசம் - இப்ப நான் சொல்றது இந்த மாசம்)

ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

//படித்து படித்து முடிவில்லாம போய்க் கொண்டே இருக்கிறது!!! //

நீங்கள் ஏற்கெனவே எர்வாமேட்டின் தலைமுடி எண்ணெய்யை பற்றி கூறியுள்ளீர்கள். உண்மையிலேயே தலையில் கரு கருவென்று முடியை வளர வைக்கக்கூடிய எண்ணெய் இருந்தால் எனக்கும் கூறுங்கள்!.

ஆனந்த் சாகர் said...

முஹம்மது கடுமையான விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கிறார். அந்த வேலையை செவ்வனே ஆயிஷா செய்திருக்கிறார். ஆயிஷாவை பின்னாலிருந்து இயக்கிய இயக்குனர்கள் அபுபக்கரும் உமரும் தான் என்பது உங்களின் புலன் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. உமரின் மகள் ஹப்ஸாவிற்கும் இது தெரிந்தே நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று இந்த விசாரணை மூலம் தெரிய வருகிறது. முஹம்மது அல்லாஹ்விடமிருந்து வஹி வருகிறது என்று கப்சா விட்டுக்கொண்டிருக்கிறார் என்று அவர்களுக்கு நன்றாக தெரிந்து விட்டது. முஹம்மது தன்னிடமே எல்லா அதிகாரத்தையும் குவித்து வைத்துக்கொண்டிருந்தார். எனவே அதிகாரத்தை சுவைக்க அந்த நால்வர் கூட்டணி முஹம்மதை நன்கு திட்டமிட்டு அவர் அளந்துவிட்டுக்கொண்டிருந்த சொர்கத்துக்கோ அல்லது நரகத்துக்கோ வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்துவிட்டனர்.

Ant said...

அல்லாசமியின் ”கோமரம்” யார் என்பதில் முகமது அனைவரையும் தனது பயங்கரவாத செயலால் அச்சுறுத்தி வெற்றி பெற்றார் தனது குடும்பத்தினர் தவிர. ஒவ்வெரு சட்ட வசனத்திலும் தனது தனிப்பட்ட வசதி பாதிக்காத வகையில் ஒரு விதிவிலக்கை ( Proviso-வை) ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தனக்கு தோல்வி ஏற்படும் போது அதிலிருந்து அவரை விடுவித்து வசனங்களை வெளியிட்டு அல்லா சாமி கையாலாத சாமி என்பதை நிறுபித்துள்ளார். இவரது தனக்கு ஒரு விதி மற்றவர்களுக்கு ஒரு விதி என்பது அவரது குடும்பத்தினருக்கு நன்கு விளங்கியது தான் எனவே தான் அவர்கள் எதற்கும் கட்டுபட விரும்பவில்லை. ஏமாற்றி வந்தவர்களுக்கு எதை நம்ப வேண்டும் என்பது கூடவா தெரியாது? இந்த கட்டுரை வழி தெரியவந்ததுள்ள மற்றொரு செய்தி அல்லாசாமி அல்லது வேறு சாமிகளின் பெயர்களில் பல்வேறு ”கோமரதாடிகள்” துாதர்கள் என்ற பெயரில் தைரியமாக செயல்பட்டு வந்துள்ளனர் என்பதுதான். முரண்பாடு என்றால் அது மதம் தான். நீண்ட கட்டுரை! சந்திக்க அத்தாட்சிகள் அதிகம் உள்ளது!! சிந்திக்க வேண்டும்!!! இதயத்தின் மீது தடையை போட்டுவைத்துள்ளவன் அவன் தான் எப்படி சிந்திக்க போகிறார்களோ?

பிசாசுகுட்டி said...

ஆனந்த் சாகர்.. இதுவரை செய்து வந்த இம்சைக்கு பழிவாங்க திரில்லர் சினிமா பாணியில் கொலை நடந்திருக்கிறது..
நிச்சயம் இப்படித்தான் நடந்திருக்கவேண்டும்.

திருடன் கையாலேயே ஜட்ஜ்மென்ட் எழுதுனமாதிரி ஹதீஸ் குரான்களில் இவர்களின் கைவரிசை இருக்கும்போது உலகின் முதன்மை தாய் என்ன அதற்கும் மேலேயே கூட தங்களை தானே புகழ்ந்து கொள்வார்கள்.

ஆனந்த் சாகர் said...

இந்தியன்,

//மர்ம நாவல் படிப்பது போன்ற உணர்வு. அருமையான எழுத்து நடை. குரான் மேல் எனக்கு நம்பிக்கை இருந்தாலும், உங்கள் பதிவைத் தொடர்ந்து படித்து வருகிறேன். ..//

இன்னுமா நீங்கள் குரானை இறை வேதம் என்று நம்புகிறீர்கள்? என்ன ஆச்சரியம்!! நீங்கள் குரானை முழுமையாக, கருத்தூன்றி படித்ததில்லையா? முஹம்மது தன்னை அல்லாஹ்வின் தூதரென்று ஏற்காதவர்களை, சிலை வணக்கம் செய்பவர்களை மட்டும் அவர்களை கண்ட இடத்திலேயே வெட்டும்படி முஸ்லிம்களுக்கு கட்டளை இடவில்லை. தன்னுடன் மக்காவை விட்டு வெளியேறி மதினாவிற்கு புலம் பெயராமல் அங்கேயே தங்கிவிட்ட மூமிங்களையும்கூட அவர்களை கண்ட இடத்திலேயே வெட்டுங்கள் என்று குரானில் முஸ்லிம்களுக்கு கட்டளை இட்டார். இது இறைவன் பேசுகிற பேச்சா, இல்லை மாஃபியா தலைவனின் கட்டளையா? முஹம்மதுவுக்கு தெரிந்ததெல்லாம் வெட்டு,குத்து தான். ஆன்மீகம் என்றால் கிலோ என்ன விலை என்று அவர் கேட்பார்! இந்திய மத நூல்களில் நிறைய ஆன்மீக கருத்துகள் உள்ளன. குரானில் எங்கே ஏதாவது ஒரு ஆன்மீக கருத்தை காட்டுங்கள் பார்க்கலாம்!

ஆன்மஞானம் said...

. //குரானில் எங்கே ஏதாவது ஒரு ஆன்மீக கருத்தை காட்டுங்கள் பார்க்கலாம்! //

இந்தக் கேள்விக்கான பதிலைதான் 1400
வருடங்களாக குரானில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பதில் தான் இல்லை. ஆய்ந்து பார்த்தால் ஆணாதிக்கமும்
பெண்மீகமும்தான் இருக்கும்.

தஜ்ஜால் said...

வாங்க பிசாசுகுட்டி,

நன்றி!

//குரான் என்பதே சல்லுவின் மரணத்துக்கு பின் தொகுக்கப்பட்ட உளறல்கள் தானே - அதிலும் பல்வேறு தொகுப்புகளை வேண்டும் வேண்டாமென்று எரித்தது போக மீதமுள்ள தொகுப்பு தானே இக்காலத்தில் இருக்கிறது// உண்மைதான்! குர்ஆன் முழுமையான புத்தகம் முஃமின்களின் வாதம்கூட வாய்மொழியாக தலைமுறைகளுக்கு கடத்தப்பட்ட, பாதுகாக்கப்படாத, ஹதீஸ்களை நம்பியே நிற்கிறது. அல்லாஹ்விடமிருந்து முஹம்மதிற்கு வந்த செய்திகளே குர்ஆன் என்பதற்கு நம்பிக்கையைத் தவிர எந்த ஆதாரமும் கிடையாது. குர்ஆனுக்கு சிறிதுகூட சம்பந்தமே இல்லாத, குர்ஆனுக்கு என்னவென்றே தெரியாத காஃபிர்கள் கூறும் அறிவியல் உண்மைகளைத் குர்ஆனுக்குள் திணித்து, இறைவேதம் என்ற தங்களது நிலையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இன்றைய முல்லாக்கள் இருக்கின்றனர.

அடுத்தது, ஹதீஸ்களின் உதவியில்லாமல் குர்ஆனை மட்டும் வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. உதாரணத்திற்கு ஹதீஸ்கள் என்று எதுவுமில்லை, குர்ஆன் மட்டும்தான் இருக்கிறது கற்பனை செய்து கொண்டு, குர்ஆனை வாசித்துப் பாருங்கள் முழுமையான புத்தகத்தின் இலட்சணம் என்னவென்பது புரியும்!
குர்ஆனுக்குள் பல்வேறு நபர்களின் பங்களிப்பு இருப்பதை அதை வசித்தவர்களால் எளிதாகச் சொல்ல முடியும். திரும்பத் திரும்ப வரும் குர்ஆன் வசனங்களும் அதைத்தான் சொல்கிறது. வெவ்வேறு நபர்களால் சொல்லப்பட்டு திரும்பத் திரும்ப வரும் ஹதீஸ் செய்திகளை கவனித்தால் இந்த ஒற்றுமையை விளங்கலாம். ஹதீஸ்களில் இருப்பதைப் போன்று நேரெதிர் கருத்துக்களை சொல்லும் வசனங்கள் இந்த ஒற்றுமைக்கு கூடுதல் உதாரணம்.

முஹம்மதிற்குப் பிறகு அதிகாரச் சண்டையில் முதலில் உருவானது குர்ஆன் அடுத்தது ஹதீஸ் இவ்வளவுதான் இஸ்லாம்!

தஜ்ஜால் said...

வாங்க ஆனந்த் சாகர்,...

நன்றி!

//உண்மையிலேயே தலையில் கரு கருவென்று முடியை வளர வைக்கக்கூடிய எண்ணெய் இருந்தால் எனக்கும் கூறுங்கள்!.// இதற்கு எர்வாமைட்டின் வேலை செய்யுமென்று எனக்குத் தோன்றவில்லை. சில இஸ்லாமிய நூல்களைப் படிக்கையில் இவர்கள் மற்றவர்களை முட்டாளாக்குவதாக நினைத்து தங்களைத் தாங்களே முட்டாளாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று தோன்றுகிறது.

இதை சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்கள் என்பார்கள். நமது முஹம்மதுவின் விஷயத்தில் முஃமின்கள், ஹதீஸ்கள், தஃப்ஸீர்கள், விளக்கவுரைகள், என்று எதையெதையோ ‘டன்’ கணக்கில் பொய்களைக் கொட்டியும் உண்மையை மறைக்க முடியவில்லை. இவர்கள் முஹம்மதின் விஷயத்தில் மட்டுமல்ல முஹம்மதின் மரணத்திற்கு மன்னிக்கவும் கொலைக்குப்பின் நிகழ்ந்த விஷயங்களையும் மூடிமழுப்பலாகத்தான் பேசுவார்கள். முஹம்மதின் போதனைகள் ஆன்மீகத்தை அதாவது மறுமை வாழ்வைப்பற்றியே இருந்தது எனில் இம்மை அதிகாரத்திற்காக தங்களுக்குள் கொலைகளை நிகழ்த்தினர் என்பது முரண்பாடு! அப்பட்டமான தோல்வி!

// முஹம்மது அல்லாஹ்விடமிருந்து வஹி வருகிறது என்று கப்சா விட்டுக்கொண்டிருக்கிறார் என்று அவர்களுக்கு நன்றாக தெரிந்து விட்டது.// ஆமாம் அதுதான் உண்மை! இறுதி நாட்களில் முஹம்மது செல்லாக்காசானாது அதனால்தான்! அவர் எங்கே அலீயை முன்மொழிந்துவிடுவாரோ என்று அஞ்சிய நால்வர் கூட்டணி முஹம்மதின் வாயை அடைத்துவிட்டது! மூச்சை நிறுத்தி விட்டது!!!

தஜ்ஜால் said...

வாங்க Ant,

நன்றி!

//இவரது தனக்கு ஒரு விதி மற்றவர்களுக்கு ஒரு விதி என்பது அவரது குடும்பத்தினருக்கு நன்கு விளங்கியது தான்// அதேதான்! முஹம்மதின் இட்டுக்கட்டல்களை அவர்கள் நன்கு தெரிந்தே இருந்திருக்கின்றனர். அதனால்தான் //அவர்கள் எதற்கும் கட்டுபட விரும்பவில்லை. ஏமாற்றி வந்தவர்களுக்கு எதை நம்ப வேண்டும் என்பது கூடவா தெரியாது? // சரியாகச் சொன்னீர்கள்!!

//இந்த கட்டுரை வழி தெரியவந்ததுள்ள மற்றொரு செய்தி அல்லாசாமி அல்லது வேறு சாமிகளின் பெயர்களில் பல்வேறு ”கோமரதாடிகள்” துாதர்கள் என்ற பெயரில் தைரியமாக செயல்பட்டு வந்துள்ளனர் என்பதுதான். // இதைப்பற்றி வரும்பகுதிகளில் விளக்க முயற்சிக்கிறேன்.

தஜ்ஜால் said...

வாங்க ஆன்ம ஞானம்,

//இந்தக் கேள்விக்கான பதிலைதான் 1400 வருடங்களாக குரானில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பதில் தான் இல்லை. //
முதலில், ஆன்மா என்று முஹம்மது எதைக் குறிப்பிடுகிறார் என்பதற்கு பதில் இருக்கிறதா? என்று கேட்டால் ரூஹிற்கு ஓடிவிடுவார்கள் சரி ரூஹ் என்றால் என்ன? என்று கேட்டால் அதைப்பற்றிய ஞானம் உங்களுக்கு வழங்கப்படவில்லையென்பார்கள். இதுதான் அவர் போதித்த ஆன்மீகம்.

// ஆய்ந்து பார்த்தால் ஆணாதிக்கமும் பெண்மீகமும்தான் இருக்கும்./// அதுதான் இஸ்லாமிய 'ஆண்'மீகம்!!!

தஜ்ஜால் said...

இத்தொடரின் துவக்கத்தில் கொஞ்சம் 18+ கலந்து எழுதியிருந்தேன் அதைத் தவிர்க்குமாறு நண்பர்களும் அறிவுறுத்தினார்கள். தபரியில் காணப்படும் பிவரும் ஹதீஸைப் பாருங்கள் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைச் சொல்லுங்கள்.

Tabari Vol-9 Page 183

"The Messenger of God died on my bosom during my turn, and I did not wrong anyone in regard to him. It was because of my ignorance and youthfulness that the Messenger of God died while he was in my lap.

இந்தியன் said...

@தஜ்ஜால்

அதுக்காக மறுபடியும் 18+ பதிவா எழுத ஆரம்பிச்சுடாதிங்க. என்ன பிரச்சனானா, இஸ்லாம் பத்தி விவாதம்[விதண்டாவாதம்] பண்ற யார்ட்டேயும் உங்க பதிவ காட்ட முடியல. நியாயமா பேசுற, பகுத்தறியும் நண்பர்கள் கூட,ஆபாச வார்த்தைகள படிச்சுட்டு, உங்கள இல்ல, என்ன திட்றானுங்கோ. என்னால மேற்கொண்டு அவங்கள்ட்ட பேச முடியல.

@ஆனந்தசாகர்

நான் 3 வருடங்களாகத் தான் ஓரளவு உணர்ந்துக் குரான் வசங்களைப் படித்துள்ளேன். எனவே எனக்கு குரானைப் பற்றி ஒரு முடிவெடுக்க போதிய அறிவு இல்லை. நான் தனியாக தேடியபோதெல்லாம் எனக்கு குரானின் நல்ல பகுதிகளே கிடைத்துள்ளன, அதற்கு நேர் எதிராக அதே குரானில் உள்ள குறைபாடுகளை நான் இந்தத்தளத்தில் படித்து வருகிறேன்.
மேலும்,”இன்று இறுதித் தீர்ப்புநாள்” என்று ஒரு கதை இந்தத் தளத்தில் ஒரு கதை இருக்கிறது அல்லவா? அந்தக் கதை படித்து 2 வருடம் இருக்கும், ஆனால் வாரத்திற்கு ஒருநாளாவது அந்தக் கதை என் நினைவுக்கு வந்துவிடும். அந்தக் கதையில் உள்ளக் கடவுளாக “அல்லாவை” எண்ண எனக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், ஒரு சில முஸ்லிம்கள், குறிப்பாக இப்பொழுதுள்ள முஸ்லிம் இளைஞர்கள் கொஞ்சம் கூட அறிவே இல்லாமல், மற்ற மதங்களைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளனர்,மேலும் பி.ஜே போன்றவர்கள் மேடையில் உளறுவதை அப்படியே மற்றவர்களிடம் வாந்தி எடுக்கிறார்கள். அவர்களுடைய வாதங்களை கேட்டாலே எரிச்சல் வரும், சிறுபிள்ளைத் தனமாக மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள், அவர்களிடம் வாதம் பண்ண, அவர்கள் வாயை அடைக்க இந்தத் தளம் மிகவும் உதவியாயிருக்கிறது. அவர்களிடமும் நான் இந்தத் தளத்தை பலமுறை பரிந்துரைத்திருக்கிறேன், அதாவது எப்படியென்றால், “ நீ உன் நம்பிக்கையை விடவேண்டாம், ஆனால் இதையும் தெரிந்துக்கொள் என்று”. அதற்கு அவர்களின் மறுமொழி என்ன தெரியுமா “இது இஸ்ரேலுடைய “மொசாட்”டின் சதி”.இது கொஞ்சம் கூட மிகைப்படுத்தப்பட்டதல்ல.அதிலும் அவர்களில் பலருக்கு இந்திய உளவு அமைப்பான "RAW"ப் பற்றிக் கேட்டால் ஒன்றுமே தெரியாது.இப்படித்தான், அடுத்த தலைமுறை முஸ்லிம்கள் வளர்கிறார்கள்.

தஜ்ஜால் said...

@ இந்தியன்

// “இது இஸ்ரேலுடைய “மொசாட்”டின் சதி”.//

என்ன...? இத்தளம் மொசாட்-ன் சதியா?

இத்தளத்தில் பங்கெடுக்கும் அனைவருக்கும் அவரவருடைய தனிப்பட்ட குடும்ப, சமுதாயப் பிரச்சினைகளுடன், பொருளாதாரத்திற்காக நாளெல்லாம் உழைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். இத்தனை சிரமங்களுக்கிடையேதான் இதில் தங்களது பங்களிப்பைச் செய்கிறார்கள்.


// அதிலும் அவர்களில் பலருக்கு இந்திய உளவு அமைப்பான "RAW"ப் பற்றிக் கேட்டால் ஒன்றுமே தெரியாது.இப்படித்தான், அடுத்த தலைமுறை முஸ்லிம்கள் வளர்கிறார்கள்.// என்ற உங்களது கருத்து உண்மையே! இதற்குக் காரணம், வளைகுடா வஹாபிகள் எடுக்கும் வாந்தியை இங்கே வந்து கொட்டும் முல்லாக்கள்தான்! எனவே எங்களுடைய முதன்மை நோக்கம் இஸ்லாமியர்களை சிந்திக்கச் செய்து, மூளைசெத்த முல்லாக்களின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதுதான். வஹாபியிஸப் பரவலுக்குப் பின்னர்தான் இஸ்லாமிய சமுதாயம் அமைதியிழந்தது. அவர்களால் நன்மை இல்லாமலில்லை எங்களைப் போன்றவர்கள் உருவானதும் அவர்களால்தான்.

Tamilan said...

நீங்கள் எப்போது தேர்ந்த எழுத்தாளர் ஆனீர்கள் நண்பரே? எழுத்து நடை பிரமாதம்..

தஜ்ஜால் said...

வாங்க தமிழன்,

மிக்க நன்றி!

எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். வழக்கமாக எழுதும் கட்டுரை நடையிலிருந்து மாற்றமாக ஒரு முயற்சி. இதை முடித்த பிறகு வழக்கமான பாணிக்கு மாறிவிடுவேன்.

C.Sugumar said...

முகம்மது வாழிவில் நடந்த அனைத்து சம்பவங்களையும் உள்ளது உள்ளபடியே எழுதுஙகள். எடிட் செய்ய வேண்டாம்.அனைத்து தகவல்களையும் விடாமல் எழுதுங்கள். தஜ்ஜால் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

தஜ்ஜால் said...

வாங்க C.Sugumar,

மிக்க நன்றிகள்.

முஹம்மதைப்பற்றி நிறைய எழுதவேண்டுமென்ற ஆசை இருக்கிறது. நேரம் கிடைப்பதுதான் மிகவும் சிரமமாக இருக்கிறது. என்னால் இயன்றவரை மறைக்கப்பட்ட இஸ்லாம்பற்றிய உண்மைகளை எழுதிக் கொண்டே இருப்பேன்.

puthiyavanprakash said...

Aslam vaalaikum boy

எனக்கு குரான் தெரியாது
அதனால விவாதிக்க வரவில்லை

தெளிவுபடுத்திக்க நான் உங்களுடன்
பேச வரலாம்மா 😴